“நான் நேர்மையாக இருக்க விரும்புகிறேன்” புதிய நிதியமைச்சரை அறிவித்த பின் பிரதமர் லிஸ் ட்ரஸ் பேச்சு!
எனது நல்ல நண்பர் குவாஸ் குவார்டெங்கை இழந்ததற்கு வருந்துகிறேன்.
பிரித்தானியாவின் புதிய நிதியமைச்சராக ஜெர்மி ஹன்ட் நியமனம்.
நான் நேர்மையாக இருக்க விரும்புகிறேன், ஆனால் இது கடினமானது என பிரித்தானியாவின் நிதியமைச்சர் குவாசி குவார்டெங்கை பதவி நீக்கம் செய்த பிறகு பிரதமர் லிஸ் டிரஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, நிதி அமைச்சர் குவாசி குவார்டெங்க (Kwasi Kwarteng) அமெரிக்காவில் நடைபெற்ற IMF கூட்டங்களில் இருந்து நாடு திரும்பிய உடன், அவரை பிரதமர் பதவி நீக்கம் செய்தார்.
குவாசி குவார்டெங்கை பதவி நீக்கம் செய்த பிறகு, தனது அரசாங்கத்தின் வளர்ச்சித் திட்டத்தின் முக்கிய கொள்கைகளை மாற்றிய பின் ”நான் நேர்மையாக இருக்க விரும்புகிறேன்’ இது கடினமானது என பிரதமர் லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் லிஸ் டிரஸ், எங்கள் பணியை நாங்கள் வழங்கும் விதத்தை மாற்ற வேண்டும், ஆனால் குறைந்த வரி, அதிக சம்பளம், மற்றும் அதிக வளர்ச்சி பொருளாதாரம் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான பணி இன்னும் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் தனது நல்ல நண்பரான குவாஸ் குவார்டெங்கை இழந்ததற்காக நம்பமுடியாத அளவுக்கு வருந்துகிறேன் எனவும் பிரதமர் லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார் .
கூடுதல் செய்திகளுக்கு: இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலால் கடுமையாக நடத்தப்பட்ட முன்னாள் உதவியாளர்: புகைப்படம்
The Rt Hon Jeremy Hunt MP @Jeremy_Hunt has been appointed Chancellor of the Exchequer @HMTreasury. pic.twitter.com/bldKWr3crG
— UK Prime Minister (@10DowningStreet) October 14, 2022
பதவி நீக்கம் செய்யப்பட்ட குவாஸ் குவார்டெங்கிற்கு பதிலாக புதிய நிதியமைச்சராக ஜெர்மி ஹன்ட்டை (Jeremy Hunt) நியமித்து மற்றொரு சிறிய பட்ஜெட் யூ-டர்னை பிரதமர் அறிவித்துள்ளார்.