அரசியலில் முதல்முறையாக பேன்ட் சர்ட் போட்டது நான்தான்: விஜய பிரபாகரன்
அரசியலில் முதல்முறையாக பேன்ட் சர்ட் போட்டது நான்தான் என்று விஜய பிரபாகரன் கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார்.
அவர் பேசியது
தருமபுரியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் பேசுகையில், "கட்சி வேஷ்டி ஏன் கட்டவில்லை என்று சிலர் என்னிடம் கேட்கின்றனர்.
ஆனால், அரசியலில் முதல்முறையாக பேன்ட் சர்ட் போட்டது நான்தான். அதற்கு பின்னர் தான் தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலையாக இருக்கட்டும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானாக இருக்கட்டும் பேன்ட் சர்ட் போடுகிறார்கள்.
அதேபோல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வரை எல்லாரும் பேன்ட்-ஷர்ட்தான் போடுறாங்க.
அதனால் யாரும் லுக்-அ பார்க்காதீர்கள். உள்ளத்தை மட்டும் பாருங்கள். என்னைக்கு கரை வேஷ்டி கட்டணும்னு கேப்டன் சொல்வாரு, அன்றைக்கு நான் கட்டுறேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |