நான் கோவிட் தடுப்பூசிக்கு எதிரானவன் இல்லை: நோவக் ஜோகோவிச் பேட்டி
பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் ''நான் கோவிட் தடுப்பூசிக்கு எதிரானவன் இல்லை, ஆனால் எனது உடலுக்கு எது சரி என்று பிறர் சொல்லுவதற்கு நான் எதிரானவன்'' என தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளுக்காக அவுஸ்திரேலியா வந்த நோவக் ஜோகோவிச், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத காரணத்தால் அவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளவேண்டும் என்றும் இல்லையேல் நாட்டில் இருந்து வெளியேறுமாறு கூறி அவரது விசாவை அவுஸ்திரேலியா அரசு ரத்துசெய்தது.
இந்தநிலையில் தனது விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த நோவக் ஜோகோவிச் அவுஸ்திரேலியாவில் கொரோனா பாதித்தவர்கள் 6 மாதங்கள் வரை தடுப்பூசி செலுத்தி கொள்வதில் இருந்து தளர்வு வழங்கப்பட்டு இருப்பதாகவும், தனக்கும் கொரோனா பாதித்து இன்னும் 6 மாதங்கள் நிறைவடையவில்லை என்பதால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியாது என கூறி அந்த வழக்கில் வெற்றி பெற்றார்.
அதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹாக், ஜோகோவிச் நாட்டில் தங்கியிருப்பது உள்நாட்டு அமைதியின்மைக்கு வழிவகுக்கும் மற்றும் நாட்டின் தடுப்பூசி இயக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று பரிந்துரைத்து மீண்டும் அவரது விசாவை ரத்து செய்ய முடிவு செய்தார்.
விசா ரத்து செய்யப்பட்டதிற்கு எதிராக மீண்டும் மேல்முறையீடு செய்த ஜோகோவிச் மனுவை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது.இதனால் ஜோகோவிச் உடனடியாக அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் ஜோகோவிச் பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், நான் கோவிட் தடுப்பூசிக்கு எதிரானவன் இல்லை, ஆனால் அவரர் உடம்பிற்கு எது சரி என அவரவர் தேர்வு செய்வதற்கு ஆதரவானவன், எனக்கு எனது உடலை தவிர்த்து வேற எந்த கோப்பைகளும் பெரிதல்ல.
எனது உடலை பாதுகாப்பதற்காக எத்தனை கோப்பைகளை வேண்டுமென்றாலும் இழக்க தயாரா இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கோவிட் தொற்றால் பல கோடி மக்கள் அவதிஅடைந்து கொண்டு இருக்கும் போது, அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்றே கோவிட் பாசிட்டிவ் சான்றிதழ் பெற்றதாக சில கருத்துக்கள் சுற்றித்திரிக்கிறது.
யாரும் ஆசைப்பட்டு கொரோனாவை பெற்றுக்கொள்ளவது இல்லை என தெரிவித்துள்ளார்.