அந்த தடை விதிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமே நான் தான்! சீமான் கொடுத்த திடீர் விளக்கம்: வைரலாகும் வீடியோ
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், டிக் டாக் தடை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் நான் தான் என கூறியுள்ளார்.
இந்தியாவில் பொழுதுபோக்கு ஆப்பான டிக் டாக் தடை செய்யப்பட்டுள்ளது. சீனாவுடன் சமீபகாலமாக மோதல் போக்கு நிலவி வருவதால், அவர்களுக்கு சரியான பாடம் புகட்டும் விதமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
டிக் டாக் மட்டுமின்றி, இது போன்று சீனாவின் பல ஆப்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரச்சாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதையடுத்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்று சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
அதில், டிக் டாக்கில் என்னை சுமார் ஏழரை கோடி பேர் பின்பற்றினர். என் வளர்ச்சியை தடுப்பதற்காகவே அந்த ஆப் தடை செய்யப்பட்டது.
ஏனெனில் அதில் என்னை ஏராளமான இளைஞர்கள் பின்பற்றினர். நான் பேசும் சில வீடியோக்களை அவர்கள் அதில் அதிகம் பகிர்ந்தனர்.
அதன் காரணமாக அதை தடை செய்வதற்கு வேறு காரணம் சொல்லி தடை செய்தனர்.
மேலும், வாட்ஸ் ஆப்பான மெசேஜை பார்வர்டு செய்யும் எண்ணிக்கை 5-ஆக குறைக்கப்பட்டதற்கும் காரணம் நான் தான், என்னுடைய வலிமை குறைப்பதற்கே அப்படி செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.