இளவரசர் சார்லசுக்கும் கமீலாவுக்கும் பிறந்த ரகசிய குழந்தை நான் தான்: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நபர்
தான்தான் பிரித்தானிய இளவரசர் சார்லசுக்கும் கமீலாவுக்கும் பிறந்த ரகசிய குழந்தை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அவுஸ்திரேலியர் ஒருவர், அதற்கு ஆதாரமாக புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் பிறந்து அவுஸ்திரேலிய தம்பதிக்கு தத்துக்கொடுக்கப்பட்டவர் Simon Dorante-Day. தான் பிரித்தானிய இளவரசர் சார்லசுக்கும் அவரது ரகசிய காதலியாக இருந்த கமீலாவுக்கும் பிறந்த குழந்தை என்று கூறிவருபவர் Simon.
தனது இளவயது புகைப்படங்களைப் பார்த்தால் சார்லசைப்போன்ற கன்னங்களும், கமீலாவைப்போன்ற தலைமுடியும் தனக்கு இருப்பதைக் காணலாம் என அவர் முன்பே கூறியுள்ளார்.
இந்நிலையில், தற்போது, தனது கூற்றுக்கு ஆதாரமாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் Simon.
பிரித்தானிய மகாராணியாரின் இளவயது புகைப்படம் ஒன்றையும், தனது மகனான Liamஇன் கருப்பு வெள்ளைப் புகைப்படத்தையும் அருகருகே வைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள Simon, இந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள், அவைகளே அவற்றுக்கிடையேயுள்ள ஒற்றுமையை சொல்லும் என்கிறார்.
1965ஆம் திகதி தாயின் வயிற்றில் கருவாக உருவான Simonஇன் கூற்று உண்மையாக இருக்குமானால், சார்லசுக்கு 17 வயதும் கமீலாவுக்கு 18 வயதும் இருக்கும்போது அவர் உருவாகியிருக்கவேண்டும்.
சார்லசும் கமீலாவும் முதன்முதலாக சந்தித்துக்கொண்டதே 1970களில்தான் என ராஜ குடும்ப விமர்சகர்கள் தெரிவித்துள்ள நிலையில், 1965ஆம் திகதி தாயின் வயிற்றில் கருவாக உருவான Simon, தான் தான் சார்லஸ் கமீலாவின் மகன் என கூறுவதுதான் இதில் வேடிக்கை!