உங்க முகத்தை பார்க்க கூடாதுன்னு தான் பெங்களூரு போனேன்.. இதோட நிறுத்திக்கோங்க: விஜயலட்சுமி
நாம் தமிழர் கட்சி சீமான் மீதான புகாரை நடிகை விஜயலட்சுமி வாபஸ் செய்து பெங்களூரு சென்ற நிலையில், சீமானை எச்சரிக்கும் விதமாக அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
சீமானுக்கு கருணை கிடையாது
நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோவில், "சீமான் என்னிடம் ரூ.1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு போட்டதில் இருந்து நான் கதறிக்கொண்டு இருப்பதாக அவரின் ஆதரவு யூடியூப் சேனல்களில் போடுகிறார்கள். சீமானுக்கும் கருணை கிடையாது. அவரை சார்ந்த யூடியூப் சேனல்களுக்கும் கருணை கிடையாது.
கடந்த 2008 ஆம் ஆண்டு என்னுடைய அக்கா பிரச்சனையை தீர்ப்பதற்காக சீமானிடம் சென்றேன். ஆனால், அவர் எனக்கும், எனது அக்காவிற்கும் நன்மை செய்யவில்லை.
பெங்களூருவில் என் வாழ்க்கையை நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.எந்த சீமானும் வரப்போவதில்லை. எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு உங்க முகத்தை பார்க்க கூடாதுன்னு தான் பெங்களூரு வந்தேன். இத்தோடு நீங்கள் எல்லாம் விட்டு விட்டீர்கள் என்றால் ஓகே" என்று பேசினார்.
சீமான் மீது ரூ.20 கோடிக்கு மான நஷ்ட வழக்கு
மேலும் அவர் அந்த வீடியோவில், "ஜகேஷ் என்கிற நடிகருடன் விஜயலட்சுமிக்கு திருமணமாகிவிட்டது என்று சீமான் கூறியுள்ளார். இதனால் சீமான் மீது ரூ.20 கோடிக்கு மான நஷ்ட வழக்கு போடுவேன்.
என்னையும், ஜகேஷ் சாருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று சொன்னால் கர்நாடககாரர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். இன்னும் என்னை அவதூறு பரப்பும் வகையில் சீமான் செயல்பட்டால் அவரை தூங்க விடாமல் செய்வேன்.
இதற்கு மேல் ஏதாவது வாலாட்டும் வேலையை செய்தால் கர்நாடகத்துக்கு சீமானை வரவழைத்து திணறடிப்பேன். எல்லாவற்றையும் நிறுத்திக் கொள்ளுங்கள்" என பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |