கோலியை நான் நிச்சயமாக அவுட் ஆக்குவேன்! சவால் விடும் இளம் வீரர்: யார் அவர் தெரியுமா?
இந்திய அணியின் நட்சத்திர வீரரான கோலியின் விக்கெட்டை நான் வீழ்த்துவேன் என்று இளம் வீரர் ஒருவர் சவால்விடுத்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகக்கோப்பை டி20 தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான தகுதிச் சுற்று போட்டிகள் ஓமனில் நடைபெறுகிறது. இந்த தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாடுவதற்காக வங்கதேச அணி அங்கு சென்றுள்ளது.
இந்நிலையில், வங்கதேச அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான Shoriful Islam, உலகக்கோப்பை டி20 தொடரில் இந்தியாவுக்கு அணிக்கு எதிராக விளையாடும் நிலை வந்தால், நான் நிச்சயமாக கோலியின் விக்கெட்டை வீழ்த்துவேன் என்று கூறுகிறார்.
அதற்கான திட்டம் தன்னிடம் இருப்பதாக கூறும் இவர், 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை டி20 தொடரில் விளையாடியுள்ளேன், தற்போது நான் விளையாடப்போவது என்னுடைய மிகப் பெரும் கனவு என்று குறிப்பிட்டுள்ளார்.
20 வயது மதிக்கத்தக்க Shoriful Islam கடந்த மார்ச் மாதம் தன்னுடைய முதல் டி20 போட்டி விளையாடியுள்ள இவர் இதுவரை 17 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.