இஸ்ரேல் மக்களை காக்க உயிரை விடவும் தயார்: பிரித்தானிய சட்ட மாணவி வெளிப்படை
மனிதகுலம் அனைத்துக்காகவும் இஸ்ரேல் மக்களை காக்கவும் உயிரை விடவும் தயார் என 23 வயதான சட்ட மாணவி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அவர்கள் மேற்கத்திய நாடுகளை
ஹமாஸ் படைகளுக்கு எதிரான போரில் களமிறங்க அழைக்கப்பட்ட 300,000 தன்னார்வலர்களில் 23 வயதான Kinneret Hamburger என்பவரும் ஒருவர்.
Credit: Ian Whittaker
ஆனால், இது ஹமாஸிடமிருந்து இஸ்ரேலைக் காப்பாற்றுவதற்கான போராட்டம் மட்டுமல்ல - இது மேற்கத்திய உலகைக் காப்பாற்றுவதற்கான போராட்டம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு படையின் லெப்டினன்ட் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த போரில் ஹமாஸ் படைகளை இஸ்ரேல் வெற்றிகொள்ளவில்லை என்றால், இனி அவர்கள் மேற்கத்திய நாடுகளை குறிவைப்பார்கள் என்றார்.
பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் நடந்த வன்முறை சம்பவங்களில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் Kinneret Hamburger தெரிவித்துள்ளார்.
மேலும், நாம் அனைத்து மனிதகுலத்திற்காகவும் போராடுகிறோம், எனவே வாழ்க்கையில் நம்பிக்கை கொண்ட எவரும் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தருணம் இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் மட்டுமே தற்போது
தற்போதைய நிலையில் இது உலக யுத்தம் என குறிப்பிட முடியாது என தெரிவித்துள்ள அவர், இஸ்ரேல் மட்டுமே தற்போது ஹமாஸ் படைகள் மீது போர் தொடுத்து வருகிறது.
@reuters
இஸ்ரேல் முன்னெடுக்கும் போரில் Kinneret Hamburger பங்காற்றி வருகிறார் என்றே கூறப்படுகிறது. ஆனால் பாதுகாப்பு காரணங்களால் என்ன பொறுப்பு என வெளியிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்ரேலியர்கள் தங்கள் நாட்டிற்காக மட்டுமல்ல, மேற்கு நாடுகளுக்காகவும் தங்களைத் தியாகம் செய்கிறார்கள் என குறிப்பிட்டுள்ள அவர், அதனால்தான் ஜோ பைடன், ரிஷி சுனக் போன்ற உலகத் தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கிறார்கள்.
இஸ்ரேல் ஹமாஸை தோற்கடிக்கவில்லை என்றால், மேற்குலகம் அடுத்த இலக்கு என்பதை அவர்கள் புரிந்துகொண்டுள்ளனர் எனவும் அந்த சட்ட மாணவி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |