சீமானை மன்னிக்க மாட்டேன்.. என்ன பண்ணனுமோ அதை செய்வேன்! விஜயலட்சுமி ஆவேசம்
நாம் தமிழர் கட்சி சீமானை இந்த முறை மன்னிக்க மாட்டேன் என்று நடிகை விஜயலட்சுமி ஆவேசமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
விஜயலட்சுமி வீடியோ
நடிகை விஜயலட்சுமி பேசிய வீடியோவில், "சீமான் மீது நான் போட்ட வழக்கை எடுக்காமல் இருக்கிறார்கள். அவர்களின் வட்டாரத்தில் கேட்டால் காவல் நிலையத்திற்கு வந்து வாபஸ் பெற்றுக்கொண்டு விட்டார்கள், திமுக இனி எடுக்க மாட்டார்கள் என்கிறார்கள்.
காவல்துறையிடம் கேட்டால், சீமான் இந்த விவகாரத்தை உயர்நீதிமன்றத்திற்கு வரவிட்டால் தான் உங்களுடைய போன், டாக்குமெண்டை தரமுடியும் என்கிறார்கள்.
2011 -ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வழக்கை எப்படி முடித்தார்களோ, அதை போல முடிக்கலாம் என்று நினைத்தார்கள் என்றால் தமிழ்நாட்டிற்கு ஒன்று சொல்கிறேன்.
சீமானை மன்னித்துவிட்டது போல இந்த முறை சீமானையும், மதுரை செல்வத்தையும் விடமாட்டேன். சவுக்கு சங்கர் வழக்கை எடுத்து இவ்வளவு பண்ணும்போது சீமானை காப்பாற்றுவது நன்றாக தெரிகிறது.
இனிமேல் உங்களிடம் வந்து சீமானின் வழக்கை எடுங்கள் என்று கேட்க மாட்டேன். எப்படி, சீமானின் சின்னம் போச்சு என்ற தகவலை கர்நாடகா கொடுத்ததோ, அதை போல இந்த வழக்கை கர்நாடகாவில் புகார் அளிப்பேன்.
கர்நாடகாவில் உள்ள ஜெக்கேஸ்வர் என்ற நடிகரின் மனைவி என்னை பற்றி அசிங்கமாக பேசி கொச்சைபடுத்தியதற்கு நீதிமன்றத்தில் கொடுத்து என்ன பண்ணனுமோ கர்நாடகாவில் இருந்து செய்வேன்.
என்னுடைய அடுத்த மூவ் இனி கர்நாடகாவில் இருந்து தான் வரும்" என்று பரபரப்பாக பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |