இது நடக்காமல் ஓய்வை நான் அறிவிக்கமாட்டேன்! தமிழன் தினேஷ் கார்த்திக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்திய அணி வீரரான தினேஷ் கார்த்திக் தன்னுடைய ஓய்வு அறிவிப்பு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
இந்திய அணியில் ஒரு நிரந்தர இடம் கிடைக்காமல் போராடி வரும் வீரர் என்றால், அது தினேஷ் கார்த்திக்கை சொல்லாம்.
விக்கெட் கீப்பிங்கிலும், பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த போது, இவருடைய ஆட்டத்தையே மறக்கும் அளவிற்கு சிறப்பாக விளையாடி அணியில் நிரந்த இடம் பிடித்தார் டோனி.
டோனி வந்த பின்பு தினேஷ் கார்த்திக்கிற்கு வேலை இல்லாமல் போய்விட்டது. இருப்பினும் அவ்வப்போது இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் போது விளையாடி வந்தார்.
தற்போது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் இவர், தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் உள்ளார்.
இந்நிலையில் தினேஷ் கார்த்திக்கிடம் ஓய்வு குறித்து கேள்வி சமீபத்தில் எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், தற்பொழுது ஓய்வு பெறும் எண்ணம் எனக்கு இல்லை. கீப்பிங்கிலும், பேட்டிங் பயிற்சியிலும் எனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறேன்.
இன்னும் 2 டி20 உலகக் கோப்பை தொடர்களில் விளையாடாமல் நிச்சயம் ஓய்வு பெற மாட்டேன்.
இதனால் எனது ஓய்வு குறித்த அறிக்கை வருவதற்கு இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் ஆகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
