நான் அங்கு போட்டியிட்டு அவர்களை கதறவிட்ருப்பேன்! ஆனால் உண்மை காரணம் இது தான்: சீமான் விளக்கம்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் என்னுடைய சொந்த ஊரில் போட்டியிட்டு கதறவிட்டிருப்பேன், திருவொற்றியூரில் நான் போட்டிட காரணம் வேறு என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை நாம் தமிழர் கட்சி அறிவித்துவிட்டது, இதன் காரணமாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரையை துவங்கிவிட்டார்.
தற்போது அவர் தென்மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வரும், அவர் நாகர் கோவிலில் தேர்தல் உரையாற்றினார்.
அப்போது, இந்த தேசத்தில் எல்லாம் தனியார் மயம், சாலையில் பெயர் தேசிய நெடுஞ்சாலை, ஆனால் அதை போடுவது எல்லாம் தனியார் தான், நான் இந்த நாட்டின் குடிமகன்.
எனக்கன்று ஒரு பொதுச்சொத்து இந்த நாட்டில் என்ன இருக்கு? ஒன்னுமில்லை.. சுடுகாடு மட்டும்தான் க்கு.. அதுவும் எல்லாருக்கும் பொதுவாக இல்லை. சில ஜாதிகளுக்கு சுடுகாடே இல்லை.
நான் ஏன் திருவொற்றியூரில் போட்டிருகிறேன், என் சொந்த ஊர் காரைக்குடியில் போட்டியிட்டிருப்பேன், அது என் சொந்த தொகுதி. எச்.ராஜா நிக்கிறார், இன்னொருத்தர் காங்கிரஸில் நிற்கிறார். கதற விட்டிருப்பேன்..
ஆனாலும் திருவொற்றியூரில் நிற்க காரணம், பொன்னேரியில் இருக்கும் காட்டுப்பள்ளியில், அதானி கட்டப்போகும் புதிய துறைமுகத்தின் நீட்சி எண்ணூர் வரை வருகிறது.
எண்ணூர் என் தொகுதிக்குள்ள வருது. இதனால் நின்னு சண்டை செய்யணும். அதானி கூட சண்டை போடணும், அந்த துறைமுகத்தை துரத்தணும். அதுக்குதான். திருவெற்றியூர், என் வெற்றியூர் இது உறுதியாக நடக்கும் என்று கூறியுள்ளார்.