இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து - 5 வீரர்கள் உயிரிழப்பு
அசாமில் இந்திய விமானப்படைக்கு (IAF) சொந்தமான விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்திய விமானப்படையின் விமானம் விபத்து
அசாமின் ஜோர்ஹட்டில் உள்ள விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படைக்கு (IAF) சொந்தமான AN-32 போக்குவரத்து விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ஸ்குவாட்ரன் லீடர் பிரஷாந்த் சிங், ஃப்ளைட் லெப்டினன்ட் ஷுபம் குமார், சார்ஜென்ட் ஜிதேந்திர சர்மா, அக்னிவீர்வாயு கேமரம் குமாவத் மற்றும் அக்னிவீர்வாயு டேனிஷ் ஆலம் ஆகிய 5 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். உயிர் பிழைத்துள்ள ஒரு துணை விமானிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
The Indian Air Force deeply regrets the loss of five personnel in the An-32 accident at Jorhat, Assam.
— Indian Air Force (@IAF_MCC) June 13, 2026
Sqn Ldr Prashant Singh, Flt Lt Shubham Kumar, Sgt Jitendra Sharma, Agniveervayu Khemaram Kumawat and Agniveervayu Danish Alam made the supreme sacrifice in the line of duty.… pic.twitter.com/9SmOjtS5mU
விபத்திற்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமா? அல்லது மோசமான வானிலை காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சோவியத் யூனியனால் முதலில் தயாரிக்கப்பட்ட இந்த ரக விமானங்களில் சுமார் 100 விமானம் இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படுகிறது.
AN-32 ஆனது கடுமையான சூழல்களில் சிறந்து விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உயரமான விமான நிலையங்களிலும் வெப்பமான வெப்பமண்டல காலநிலைகளிலும் கச்சிதமாகச் செயல்படுகிறது.
இதனால் 7.5 டன் சரக்கு, 50 பயணிகள் அல்லது 42 வான்குடை வீரர்களை ஏற்றிச் செல்ல முடியும். மேலும், இது தொலைதூரப் பகுதிகளில் பொருட்களை விநியோகம் செய்வதற்காகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |