13,629 அடி உயரத்தில் IL-76 MT விமானம் தரையிறக்கம்; உலக சாதனை படைத்த இந்திய விமானப்படை
iaf set world record by landing IL-76 MT at 13,629 feet in ladakh: இந்திய விமானப்படை, 13,629 அடி உயரத்தில் IL-76 MT விமானத்தை தரையிறக்கம் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.
13,629 அடி உயரத்தில் IL-76 MT தரையிறக்கம்
IL-76 MT என்பது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட, துருப்புகள், உபகரணங்கள் மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்ல வடிவமைக்கப்பட்ட 4 என்ஜின்கள் கொண்ட ஒரு கனரக போக்குவரத்து விமானமாகும்.

தொலைதூர மற்றும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குப் பணியாளர்களையும் அத்தியாவசியப் பொருட்களையும் கொண்டு செல்ல இந்திய விமானப்படையில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்த விமானத்தை லடாக்கின் நியோமா (Nyoma) விமானப்படைத் தளத்தில், 13,629 அடி உயரத்தில் வெற்றிகரமாகத் தரையிறக்கி, இந்திய விமானப்படை உலக சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம், உலகில் இதுவரை அந்த விமானம் மிக உயரமான இடத்தில் தரையிறங்கிய சாதனையைப் படைத்துள்ளது.
இந்திய விமானப்படை பெருமிதம்
இது தொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள பதிவில், "13,629 அடி. விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு புதிய உயரம். இந்திய விமானப்படையின் IL-76MD விமானம், நியோமாவில் வெற்றிகரமாகத் தரையிறங்கி சரித்திரம் படைத்துள்ளது.
இதன் மூலம், உலகில் வேறு எங்கும் இந்த விமானம் இதுவரை அடைந்திராத மிக உயரமான தரையிறக்கத்தை இது குறிக்கிறது.
13,629 FEET. A NEW HEIGHT IN AVIATION HISTORY. An Indian Air Force IL-76MD has scripted history with a successful landing at Nyoma, marking the highest-altitude landing ever achieved by the aircraft anywhere in the world. A remarkable demonstration of the aircraft’s enduring capability, backed by the exceptional skill, precision, and professionalism of its crew. A milestone that reinforces India’s strategic airlift capability. Pushing boundaries. Redefining limits. Making history. #IndianAirForce #IAF #Nyoma #AviationHistory #IndianDefence @DefenceMinIndia @SpokespersonMoD @HQ_IDS_India @adgpi @indiannavy @CareerinIAF @air_veterans
— Indian Air Force (@IAF_MCC) November 7, 2026
விமானத்தின் நீடித்த திறனுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க சான்றாகும். இதன் குழுவினரின் அபாரமான திறமை, துல்லியம் மற்றும் தொழில்முறை ஆகியவை இதற்கு வலு சேர்க்கின்றன.
இந்தியாவின் மூலோபாய வான்வழிப் போக்குவரத்துத் திறனை வலுப்படுத்தும் ஒரு மைல்கல் இது. எல்லைகளைத் தாண்டி, வரம்புகளை மறுவரையறை செய்து, சரித்திரம் படைத்துள்ளது" என குறிப்பிட்டுள்ளது.
நியோமா விமானப்படைத்தளம்
கிழக்கு லடாக்கில் அமைந்துள்ள நியோமா, சீனாவுடனான உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு (LAC) அருகில் இருப்பதால் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது.

நியோமா, 1962 போரின் போது ஒரு மேம்பட்ட தரையிறங்கும் தளமாக முதலில் கட்டப்பட்டு, பின்னர் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது.
2022 ஆம் ஆண்டில் ரூ.210 கோடி மதிப்பீட்டில் விமானப்படைத்தளமாக மாற்ற ஒப்பந்த புள்ளி கோரி, 2023 ஆம் ஆண்டில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினார்.
2025 ஆம் ஆண்டில் அப்போதைய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங், அங்கு ஒரு C -130J சூப்பர் ஹெர்குலஸ் விமானத்தைத் தரையிறக்கி, அந்த தளத்தை முறைப்படி திறந்து வைத்தார்.
இதன் மூலம், லே, கார்கில் மற்றும் தோய்சே ஆகியவற்றுக்குப் பிறகு லடாக்கில் இது நான்காவது இந்திய விமானப்படைத் தளமாக ஆனது.