MiG-21 போர் விமானங்களை மொத்தமாக கைவிடும் இந்திய விமானப்படை
இந்தியாவின் முதல் சூப்பர்சோனிக் போர் விமானங்களான மிக்-21 ரக விமானங்களை மொத்தமாக கைவிட இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பறக்கும் சவப்பெட்டி
வெளிவரும் தகவலின் அடிப்படையில், செப்டம்பர் 19 அன்று சண்டிகர் விமானப்படை தளத்தில் ஒரு பிரமாண்டமான பிரியாவிடை விழா நடைபெறும் என்றே கூறப்படுகிறது.
கடைசியாக செயல்பாட்டில் இருந்த மிக்-21 விமானங்கள், பாந்தர்ஸ் என்று அழைக்கப்படும் 23வது படைப்பிரிவைச் சேர்ந்தவை. 1963 ஆம் ஆண்டு அவை விமானப்படையில் சேர்க்கப்பட்டதிலிருந்து அனைத்து முக்கிய இந்திய இராணுவ நடவடிக்கைகளிலும் மிக்-21 ரக விமானங்கள் முக்கிய பங்கு வகித்தன.
1965 மற்றும் 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போர்கள் முதல் 1999 இல் கார்கில் போர் மற்றும் 2019 இல் பாலகோட் தாக்குதல்கள் வரை, மிக்-21 விமானங்கள் இந்தியாவின் வான் பாதுகாப்பின் மையமாக இருந்து வருகின்றன.

500 சதவீத வரி... பொருளாதாரத்தை சிதைப்போம்: இந்தியாவிற்கு ட்ரம்ப் நிர்வாகத்திடம் இருந்து கெட்ட செய்தி
புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டிருந்தாலும், மிக்-21 ரக விமானங்களும் விவாதங்களில் சிக்கியுள்ளது. பல ஆண்டுகளாக, அடிக்கடி ஏற்படும் விபத்துகள் மிக்-21 ரக விமானங்களுக்கு பறக்கும் சவப்பெட்டி என்ற துரதிர்ஷ்டவசமான புனைப்பெயரைப் பெற்றுத் தந்தன.
இருப்பினும், இந்தியாவின் விமான சக்தியை வடிவமைப்பதில் அவற்றின் முக்கியத்துவத்தை மறுக்க முடியாது. இந்தியா 850க்கும் மேற்பட்ட மிக்-21 விமானங்களை இயக்கியுள்ளது, இதன் மூலம் உலகின் மிகப்பெரிய மிக்-21 விமானக் குழுவாக இந்தியா திகழ்கிறது.
சுமார் 60 நாடுகள்
சுமார் 600 மிக்-21 விமானங்கள் இந்தியாவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டன. சோவியத் ரஷ்யா மற்றும் இந்தியா கூட்டணியால் இந்த விமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
1955 முதல் மொத்தம் 11,496 மிக்-21 விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதில் 840 விமானங்கள் இந்தியா தரப்பிலும், 10,645 மிக்-1 விமானங்களை சோவொயத் ரஷ்யாவும் கட்டமைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
நான்கு கண்டங்களில் சுமார் 60 நாடுகள் மிக்-21 விமானங்களை இயக்கியுள்ளன, மேலும் மிக்-21 தனது முதல் விமானப் பயணத்திற்கு ஏழு தசாப்தங்களுக்குப் பிறகும் பல நாடுகளுக்கு சேவை செய்கிறது. 1986ல் கடைசியாக அதன் தயாரிப்பு நிறுத்தப்பட்டது.
தற்போது இந்திய விமானப்படையும் மிக்-21 விமானங்களுக்கு ஓய்வளிக்க முடிவு செய்துள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |