படுக்கையறையில் இருந்தபடி காதலனுடன் புகைப்படம் ஏன்? மனம் திறந்த நடிகை ஸ்ருதிஹாசன்
தன்னுடைய காதலன் பற்றி பேட்டியொன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகையும், பாடகியும், கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதிஹாசன்.
அன்பான திறமையான காதலன்
மேலும் கூறுகையில், சாந்தனு இயற்கையிலேயே பெண்களை மதிக்க தெரிந்தவர், அவருடைய குடும்பத்து பெண்களை அவர் மிகவும் மரியாதையோடு நடத்துகிறார்.
இது நான் அவரிடம் ரசித்த ஒரு விடயம் மற்றும் அவர் ஒரு திறமையான, தனித்துவமான கலைஞர் எனவும், தினந்தோறும் புதுப்புது விடயங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் எல்லாப்பெண்களுக்கும் அன்பான அப்பாவும் புரிந்துக்கொள்ளும் காதலனும் கிடைப்பதில்லை.
நானும் கூட எல்லாவற்றையும் கடந்துதான் வந்திருக்கிறேன்.
இப்போதுதான் என் வாழ்க்கையில் இப்படி ஒருவரை சந்தித்துள்ளேன் எனவும் கூறியுள்ளார்.
இலகுவாக ஜட்ஜ் செய்துவிடுகிறார்கள்!
மேலும் அவர் கூறுகையில் ஒருவர் எதற்காக குறித்த ஒரு முடிவை எடுக்கிறார் என தெரியாமலே இலகுவில் நாம் ஜட்ஜ் செய்கிறோம்.
நமக்கு தெரியாது அந்நபரின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது, எதனால் அந்ந முடிவு எடுக்கிறார் என ஆனாலும் நாம் அவரை இழிவாக பேசிவிடுகிறோம்.
நிறைய தடவைகளில் சமூகத்தில் நடக்கும் விடயங்களினால் நான் எவ்வளவோ விடயங்களை விட்டுக்கொடுத்திருக்கிறேன்.
ஒரு நபரைப்பற்றி தெரியாமல் ஜட்ஜ் செய்யக்கூடாது.
முக்கியமாக பெண்களை ஜட்ஜ் செய்யக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஒரு பெண்ணுக்கு சிறு வயதிலேயே திருமணம் நடைப்பெறும் போது, பெண்ணிற்கான கல்வி கொடுக்கப்படாத போது,ஒரு பெண்ணிற்கான அடிப்படை வசதி கிடைக்காதப்போது பெண் சமத்துவம் இழப்பதாக நான் கருதுகிறேன் என ஸ்ருதி கூறியுள்ளார்.
திருமணத்தை பற்றிய புரிதல் எனக்கு வரவில்லை!
அவர் கூறுகையில் திருமணம் பற்றிய புரிதல் எனக்கு கிடைக்கவில்லை .
இந்த வயதில் தான் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என நான் நினைத்தது இல்லை.
மற்றவர்கள் குறித்த வயதில் திருமணம் செய்துக்கொள்வதெல்லாம் சரி, ஆனால் எனக்கு இப்போதைக்கு அப்படி ஒரு எண்ணம் வரவில்லை.
திருமணத்தை பற்றிய திட்டம் இல்லாவிட்டாலும் சரியான ஒரு துணைவரை தெரிந்தெடுக்க வேண்டும் என எப்போதும் நினைப்பேன் எனவும் அவர் கூறினார்.
அப்பா கொடுத்த அட்வைஸ்!
காதலைப்பற்றி எல்லாம் அட்வைஸ் கொடுத்ததில்லை, உன் மனம் சொல்வதை செய் என கூறியுள்ளார் என கூலாக கூறுகிறார் ஸ்ருதி.