உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது முட்டாள்தனம்! கடுமையாக சாடிய பிரபல வீரர்
தினேஷ் கார்த்திக்கை இந்திய அணியில் தேர்வு செய்தது முட்டாள்தனம் என கூறும் இயான் சேப்பல்.
ரிஷப் பண்ட் தான் சரியான தேர்வாக இருப்பார் என கருத்து.
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்து விளையாட வைத்தது முட்டாள்தனம் என இயான் சேப்பல் சாடியுள்ளார்.
உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இதில் பெரிதும் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றமளித்த வீரராக இந்திய அணியின் தினேஷ் கார்த்திக் உள்ளார்.
இந்த தொடரில் இதுவரை அவர் விளையாடிய 3 போட்டிகளிலும் நல்ல ஸ்கோரை செய்யவில்லை. ஃபீல்டிங்கின் போதும் காயம் அடைந்து வெளியேறினார். இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது.
insidesport
இது குறித்து பேசிய கிரிக்கெட் ஜாம்பவான் இயான் சேப்பல், தினேஷ் கார்த்திக்கை ரிஷப் பண்ட் இருக்கும் போது தேர்வு செய்தது முட்டாள்தனமான முடிவு. ரிஷப் பண்ட் ஒரு நிகழ்கால சூப்பர் ஸ்டார். அவர் தன்னை நிரூபித்துளார்.
பவுலர்கள் அஞ்சும் ஒரு இடதுகை ஆட்டக்காரர். கில்கிறிஸ்ட் மற்றும் ஜெயசூர்யா போன்ற அதிரடியான ஆட்டக்காரர் என கூறியுள்ளார்.