விராட் கோலின்னா யாருன்னு தெரியுமா? - புது விளக்கம் தரும் இயான் சேப்பல்
இந்திய அணியை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றவர் விராட் கோலி என இயான் சேப்பல் புகழாரம் சூட்டியுள்ளார்.
டி20 உலகக் கோப்பைக்குப்பின் டி20 கேப்டன் பதவியை ராஜினாமா செய்த விராட் கோலி அதன்பின் தென்னாப்பிரிக்கா தொடருடன் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். இதனிடையே ஒருநாள் அணியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனால் விராட் கோலி தலைசிறந்த கேப்டனா? என்ற விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் விராட் கோலி வெற்றிக்கேப்டன், ஜோ ரூட் மோசமான கேப்டன் என இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் இது இரண்டு கேப்டன்களுக்கு இடையிலான கதை. ஒருவர் அவருடைய கேப்டன் பதவியை சிறப்பாக செய்தார். மற்றொருவர் தோல்வியடைந்தார் என கூறியுள்ளார்.
கோலி இந்திய அணியை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்வதற்கான தலைமை பண்பை பெற்றிருந்தார். ஜோ ரூட் இங்கிலாந்து அணியை மற்ற கேப்டன்களை விட அதிக முறை வழி நடத்தியிருந்ததால் அவர் கேப்டன்ஷிப்பில் தோல்வியடைந்துள்ளார். கங்குலி, டோனியிடம் இருந்து இந்திய அணியின் பெருமையை பெற்றுக்கொண்ட விராட் கோலி, கடந்த ஏழு வருடமான அணியை தொடர்ச்சியாக சிறப்பான வகையில் கட்டமைத்துள்ளார் என இயான் சேப்பன் புகழ்ந்து தள்ளியுள்ளார்.