அவர் 8வது உலக அதிசயம்! தசைப்பிடிப்பு என கீழே விழுந்த ஆப்கான் வீரரை கிண்டல் செய்த வர்ணனையாளர்
ஆப்கானிஸ்தான் வீரர் குல்பதின் நைப் தசைப்பிடிப்பு எனக் கூறி கீழே விழுந்ததை வர்ணனையாளர் இயான் ஸ்மித் கிண்டல் செய்துள்ளார்.
கீழே விழுந்த குல்பதின் நைப்
வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் வங்கதேச அணி சேஸிங்கில் இருந்தபோது அடிக்கடி மழைக்குறுக்கிட்டது. குறிப்பாக 12வது ஓவரின் 4வது பந்தை வீசிய பின்னர் மழைபெய்யத் தொடங்கியது.
அப்போது வங்கதேசம் 81 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ஆனால், DLS விதிப்படி 83 ஓட்டங்கள் எடுத்திருக்க வேண்டும் என்ற நிலையில், அடுத்த பந்தை வீசினால் ஆப்கானுக்கு சிக்கல் ஏற்பட்டுவிடும் என்பதால் பயிற்சியாளர் ஜோனாதன் டிராட் தனது வீரர்களை வேகத்தைக் குறைக்கும்படி கூறினார்.
This has got to be the most funniest thing ever ? Gulbadin Naib just breaks down after coach tells him to slow things down ?? pic.twitter.com/JdHm6MfwUp
— Sports Production (@SportsProd37) June 25, 2024
உடனே ஸ்லிப்பில் நின்றிருந்த குல்பதின் நைப் தசைப்பிடிப்பு எனக் கூறி கீழே விழுந்தார். இதனால் அடுத்த பந்து வீசப்படாமல் மழை அதிகரித்ததால் வீரர்கள் பெவிலியன் திரும்பினர்.
இணையத்தில் வைரல்
மழை நின்று ஆட்டம் தொடங்கிய பின் குல்பதின் நைப் பந்துவீசி விக்கெட் வீழ்த்தினார். இது இணையத்தில் வைரலானது. அத்துடன் அவருக்கு நடிப்பிற்காக ஆஸ்கார் விருது கொடுக்க வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
அதேபோல் வர்ணனையாளர் இயான் ஸ்மித் (Ian Smith) கிண்டலாக குல்பதின் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர், ''கடந்த 6 மாதங்களாக எனக்கு முழங்கால் வலி உள்ளது. ஆட்டம் முடிந்தவுடன் குல்பதின் நைபின் மருத்துவரை நேராகப் பார்க்கப் போகிறேன். அவர் இப்போது உலகின் 8வது அதிசயம்'' என தெரிவித்துள்ளார். இதுவும் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
“I've a dodgy knee for the last 6 months, I am gonna see Gulbadin Naib's doctor straight after the game. He's the 8th wonder of the world right now.”
— Cricketopia (@CricketopiaCom) June 25, 2024
~ Ian Smith pic.twitter.com/Hki1lUBqgI
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |