22 வயதில்.., பயிற்சியில்லாமல் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் வெற்றி பெற்ற ஐஏஎஸ் அதிகாரி
பயிற்சியில்லாமல் தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற ஐஏஎஸ் அதிகாரி யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
யார் அவர்?
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு என்பது (CSE) நாட்டின் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதற்கு கடின உழைப்பும் ஆர்வமும் தேவை.
இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மாணவர்கள் நிர்வாகத்தில் சேர வேண்டும் என்ற கனவுகளை சுமந்து வருகிறார்கள். அதே நேரம் அதிக செலவில் பயிற்சி மையத்தில் சேர்ந்து பல மாணவர்கள் கற்று வருகின்றனர்.
இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பயிற்சி ஏதும் இல்லாமல் தன்னுடைய 22 வயதில் முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
2014-ம் ஆண்டில் அகில இந்திய தரவரிசையில் (AIR) 34வது இடத்தைப் பிடித்த அருண்ராஜ் ஐஏஎஸ் அதிகாரியை பற்றி தான் பார்க்க போகிறோம்.
இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர் அருண்ராஜ். இவர், பள்ளிப் பருவத்தில் இருந்தே கல்வியில் சிறந்து விளங்கினார்.
பின்னர், இடைநிலைப் படிப்பை முடித்த பிறகு இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற பொறியியல் கல்லூரிகளில் ஒன்றான கான்பூரில் உள்ள ஐஐடியில் படித்தார். இருப்பினும் இவர், வேறு பாதையில் சென்று UPSC தேர்வில் வெற்றி பெற்று ஐஏஎஸ் அதிகாரி ஆனார்.
இவர் தனது இளங்கலைப் படிப்பின் நான்காவது ஆண்டில் UPSC தேர்வுக்காக தன்னை தயார் படுத்திக்கொள்ள ஆரம்பித்தார்.
NCERT புத்தகங்களை வைத்து mock tests மூலம் பயிற்சி செய்தார். மேலும், online resources பயன்படுத்தி தேர்வுக்கு தயாரானார்.
இதையடுத்து, UPSC 2014 -ல் அகில இந்திய தரவரிசையில் (AIR) 34வது இடத்தைப் பிடித்தார். தற்போது, தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ELCOT) இல் செயல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |