2 வருடத்திற்கு மேல் இடைவெளி.., 2-வது முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி
10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற பெண் ஒருவர் 2-வது முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
பெண் ஐஏஎஸ் அதிகாரி
டெல்லியைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். சோனாலி தேவ், கார்மல் கான்வென்ட் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். 10 ஆம் வகுப்புத் தேர்வுகளில் 91.8% மற்றும் 12 ஆம் வகுப்பில் 91.2% மதிப்பெண்களைப் பெற்றார்.
இதையடுத்து, டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (DTU) தனது கல்வித் திறமையைத் தொடர்ந்து வெளிப்படுத்தினார்.10 இல் 8.15 என்ற CGPA உடன் கணினி அறிவியலில் பி.டெக் பட்டம் பெற்றார்.
பின்பு ஒரு மென்பொருள் உருவாக்குநராக PayU-வில் சேர்ந்து தொழில்முறை திறன்களை வெளிப்படுத்தினார் சோனாலி.
இதையடுத்து, CAT தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஐஎம் கல்கத்தாவில் எம்பிஏ முடித்த பிறகு ஒரு ஆய்வாளராகப் பணியாற்றினார்.
பின்பு, சிவில் சர்வீசஸ் மீது தனது கவனத்தைத் திருப்பி, 2.5 வருட தொழில் இடைவெளியை எடுத்துக்கொண்டு, UPSC தேர்வுக்குத் தயாராவதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்,
முதல் முயற்சியில் தோல்வியை சந்தித்த சோனாலி கடின உழைப்பின் காரணமாக 2021 ஆம் ஆண்டு UPSC தேர்வில் தனது இரண்டாவது முயற்சியிலேயே வெற்றி பெற்று அகில இந்திய அளவில் 41வது இடத்தைப் பிடித்தார்.
பின்பு ரேவாவில் உதவி கலெக்டராக பதவியேற்றார். பின்னர் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தில் உதவிச் செயலாளராகப் பணியாற்றினார். தற்போது மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிச்சியா தெஹ்சிலின் துணைப் பிரிவு மாஜிஸ்திரேட்டாக (SDM) பணியாற்றி வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |