IAS அதிகாரியின் மகள்... ஆண்டுக்கு 450 கோடி சம்பளம் பெறும் கணவர்: யார் இந்த அனுபமா நாதெல்லா
டெல்லியில் பணியாற்றிய IAS அதிகாரியின் மகளான அனுபமா வேணுகோபால், 1992ல் மைக்ரோசாப்ட் பொறியாளரை திருமணம் செய்து கொண்டு அனுபமா நாதெல்லா ஆனார்.
அனுபமா நாதெல்லா
அனுபமா நாதெல்லாவின் கணவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான சத்யா நாதெல்லா என்பவர் தான். சத்யா நாதெல்லாவும் IAS அதிகாரியின் மகன் தான்.
உலகில் அறியப்படும் மிகவும் பிரபலமான ஒருவரின் மனைவி என்றாலும் அனுபமா நாதெல்லா, ஊடக வெளிச்சம் தவிர்த்து வருபவர். அனு என அறியப்படும் அனுபமா டெல்லியில் பிறந்தவர்.
ஹைதராபாத்தில் தனது கல்வியைத் துவங்கியவர் பின்னர் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை பட்டப்படிப்பை முடித்தார். சத்யா நாதெல்லாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் தமக்கு பிடித்தமான கட்டிடக்கலை வேலையை விட்டுவிட்டு, குடும்பத் தலைவியாகவே அனுபமா தற்போதும் தொடர்கிறார்.
1992ல் சத்யா நாதெல்லாவை திருமணம் செய்து கொள்ளும் போது, ஏற்கனவே அமெரிக்காவில் நிரந்தர வதிவிட அனுமதி பெற்றிருந்தார் சத்யா நாதெல்லா. ஆனால் அமெரிக்கா நிர்வாகத்தால் அனுபமாவின் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
நிரந்தர வதிவிட அனுமதி
இதன் பின்னர் சுற்றுலா விசாவில் மட்டுமே இந்த தம்பதி சந்தித்துள்ளது. மட்டுமின்றி, அனுபமாவின் விசா விண்ணப்பம் எளிதாக்கும் பொருட்டு, தமது நிரந்தர வதிவிட அனுமதியை உதறியுள்ளார் சத்யா நாதெல்லா.
அத்துடன் H-1B விசாவுக்கு மாறியுள்ளார். அனுபமா - சத்யா தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். ஆனால் 2022ல் cerebral palsy பாதிப்பால் இவர்களின் 26 வயது மகன் Zain மரணமடைந்தது குடும்பத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன் பின்னர் சிறார் மருத்துவமனை ஒன்றில் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அனுபமா உதவி வருகிறார். மட்டுமின்றி, ஆந்திரா மாநிலத்தில் வேளாண் மக்களின் நிலை கருதி 2 கோடி தொகையை நன்கொடையாக அளித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் இந்திய பிரதமர் நிவாரண நிதிக்கு 2 கோடி தொகையை நன்கொடை அளித்துள்ளார். சத்யா நாதெல்லாவின் தற்போதைய ஆண்டு சம்பளம் 450 கோடி என்றே கூறப்படுகிறது. அவரது மொத்த சொத்து மதிப்பு 6200 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |