ரூ.23 லட்சம் சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு.., UPSC தேர்வில் வெற்றி பெற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி
ரூ.23 லட்சம் சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு UPSC தேர்வில் வெற்றி பெற்ற ஐஏஎஸ் அதிகாரியை பற்றி பார்க்கலாம்.
யார் அவர்?
நாட்டின் கடினமான தேர்வுகளில் ஒன்றாக கருதப்படும் UPSC சிவில் சர்வீஸ் தேர்வு (CSE), மில்லியன் கணக்கானவர்களுக்கு ஒரு கனவாக இருக்கும். இருப்பினும் சிலர், தனது கடினமான பயணத்தின் மூலம் அனைவருக்கும் முன்மாதிரியாக உள்ளனர்.
UPSC CSE 2018 -ல் அகில இந்திய ரேங்க் (AIR) 28 வது இடத்தைப் பெற்ற IAS அதிகாரி காஜல் ஜாவ்லாவை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

SBI, HDFC வங்கி FD-ல் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால்.., 5 வருடங்களுக்கு பிறகு எவ்வளவு தொகை கிடைக்கும்?
உத்தரபிரதேசத்தின் மீரட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர் காஜல் ஜாவ்லா (Kajal Jawla). இவர், மதுராவில் 2010ம் ஆண்டில் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷனில் பி.டெக் படித்தார்.
பின்னர் ஒரு புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனமான விப்ரோவில் சேர்ந்தார். அங்கு ஆண்டு சம்பளமாக ரூ.23 லட்சம் பெற்றார்.
இருப்பினும், யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்று ஜாவ்லா உறுதியாக இருந்தார். இதற்காக ஒன்பது ஆண்டுகளாக தனது முழுநேர வேலையுடன் சேர்ந்து அயராது படித்தார்.
இவரின் Instagram சுயவிவரத்தின்படி, Deloitte மற்றும் EY போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களிலும் பணிபுரிந்திருக்கிறார் என்று தெரிகிறது.
மேலும், இவருடைய கணவர் வீட்டு வேலைகளை நிர்வகித்துள்ளார். இதனால், தினமும் மூன்று மணி நேரம் படித்து கடுமையாக உழைத்தார். கூடுதலாக, தனது ஓய்வு நாட்களையும் முழுநேர படிப்பிற்காக பயன்படுத்தினார்.
இதையடுத்து, UPSC CSE 2018 -ல் அகில இந்திய தரவரிசையில் 28 -வது ரேங்கை பெற்றார். தற்போது மத்தியப் பிரதேச கேடரில் காஜல் ஜாவ்லா பணியமர்த்தப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |