3 ஆண்டுகளாக மொபைல் போன் பயன்படுத்தாமல் UPSC தேர்வில் வெற்றி பெற்ற இளம் ஐஏஎஸ் அதிகாரி யார் தெரியுமா?
முதல் மூன்று முயற்சிகளிலும் யுபிஎஸ்சி சிஎஸ்இ தேர்வில் தோல்வி அடைந்து நான்காவது முயற்சியில் வெற்றி பெற்ற இளம் ஐஏஎஸ் அதிகாரி யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
யார் அவர்?
இந்தியாவில் கடினமான தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும் என்று பெரும்பாலான மாணவர்கள் கடுமையான உழைக்கிறார்கள். அத்தகைய ஐஏஎஸ் (இந்திய நிர்வாக சேவை) அதிகாரி நேஹா பைத்வாலின் கதையை தான் பார்க்க போகிறோம்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் (இந்திய காவல் சேவை) உள்ளிட்ட அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் யுபிஎஸ்சி சிஎஸ்இ தேர்வில் தேர்ச்சி பெற நேஹா கடுமையான போராட்டங்களை சந்தித்தார்.
அந்த நேரத்தில் தனது படிப்பில் முழுமையான கவனம் செலுத்த வாழ்க்கையில் ஒரு பெரிய முடிவை எடுத்தார்.
அதாவது, தனது மொபைல் போன் தனக்கு இடையூறாக இருந்து வந்தததால் மூன்று வருடங்களாக அதைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வந்தார். இந்திய மாநிலமான ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் பிறந்த நேஹா சத்தீஸ்கரில் வளர்ந்தார்.
ஜெய்ப்பூரில் பள்ளிப் படிப்பைத் தொடங்கி, பின்னர் டெல்லி பப்ளிக் பள்ளி (டிபிஎஸ்) கோர்பா மற்றும் டிபிஎஸ் பிலாஸ்பூர் போன்ற பள்ளிகளில் பயின்றார்.
உயர் படிப்புக்காக ராய்ப்பூரில் உள்ள டிபி பெண்கள் கல்லூரியில் சேர்ந்து பல்கலைக்கழகத்தில் முதலிடம் பிடித்தார். பட்டப்படிப்பில், வரலாறு, பொருளாதாரம் மற்றும் புவியியல் போன்ற பாடங்களைப் படித்தார்.
இவர் தனது தந்தை ஷ்ரவன் குமாரால் ஈர்க்கப்பட்டு, சிவில் சர்வீஸ் துறையில் ஒரு தொழிலைத் தொடர முடிவு செய்தார். ஆனால், இவரால் முதல் மூன்று முயற்சிகளிலும் யுபிஎஸ்சி சிஎஸ்இ தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை.
இதையடுத்து, தனது நான்காவது முயற்சியிலேயே CSE தேர்வில் தேர்ச்சி பெற்று, 569 என்ற அகில இந்திய தரவரிசை (AIR) பெற்று ஒட்டுமொத்தமாக 960 மதிப்பெண்களைப் பெற்றார். இந்த சாதனையை அவர் 24 வயதில் அடைந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |