மருத்துவப் பணியை விட்டுவிட்டு முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற IAS அதிகாரி
மருத்துவப் பணியை விட்டுவிட்டு முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற IAS அதிகாரி யார் என்பதை பார்க்கலாம்.
யார் இவர்?
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தேர்வு இந்தியாவின் மிகக் கடினமான போட்டித் தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தப் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற பல மணி நேரம் படிக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான மாணவர்கள் IAS, IFS, IRS மற்றும் IPS ஆக தேர்வெழுத முயல்கின்றனர். அவர்களில் ஒரு சிலரே தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். இது முதல்நிலைத் தேர்வு, பிரதானத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.
அந்தவகையில் இந்திய நிர்வாக சேவைகளில் (IAS) பல சிறந்த முன்மாதிரிகள் உள்ளனர். அதில் UPSC தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற டினா டாபி ஒருவர் ஆவார்.
ஆனால் தற்போது நாம் அவரது தோழியான ஆர்திகா சுக்லாவின் கதையை பற்றி தான் பார்க்க போகிறோம். உலகின் கடினமான தேர்வுகளில் ஒன்றான 2015 UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் ஆர்திகா அகில இந்திய அளவில் 4வது இடத்தைப் பிடித்தார்.
யுபிஎஸ்சியில் ஐஏஎஸ் டினா ஏஐஆர் 1 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த அதே ஆண்டில், ஆர்திகா தேர்ச்சி பெற்றார்.
வாரணாசியைச் சேர்ந்தவர் ஐஏஎஸ் ஆர்திகா. செப்டம்பர் 5, 1990 -ல் பிறந்த இவர் வாரணாசியில் உள்ள செயிண்ட் ஜான்ஸ் பள்ளியில் பயின்றார். பின்னர், டெல்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்தார்.
குறிப்பாக, UPSC தேர்வுக்கு படிக்க, ஐஏஎஸ் ஆர்திகா சண்டிகரில் உள்ள PGIMER இல் தனது மருத்துவ பணியை விட்டு வெளியேறினார்.
இவர், ஐஏஎஸ் ஜஸ்மீத் சிங் சந்துவை திருமணம் செய்தார். இருவரும் முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் (LBSNAA) பயிற்சியின் போது சந்தித்தனர். இதையடுத்து 2017 -ம் ஆண்டில்இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
ஆர்திகா ராஜஸ்தானில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். உதய்பூர் மாவட்டத்தின் ரிஷப்தேவில் துணைப்பிரிவு அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
2019 முதல் 2020 வரை அஜ்மீரின் துணைப்பிரிவு மாஜிஸ்திரேட்டாக இருந்தார். ஐஏஎஸ் ஆர்திகாவின் தாயார் லீனா சுக்லா ஒரு இல்லத்தரசி ஆவார். அவரது தந்தை பிரிஜேஷ் சுக்லா மருத்துவர்.
இவரது மூத்த சகோதரர்களான கௌரவ் சுக்லா மற்றும் உத்கர்ஷ் சுக்லாவும் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |