6 -ம் வகுப்பில் தோல்வி.., பயிற்சி இல்லாமல் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற IAS அதிகாரி
பள்ளியில் தோல்வியடைந்து, பயிற்சி இல்லாமலேயே முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற IAS அதிகாரி யார் என்பதை பார்க்கலாம்.
யார் அவர்?
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் (சிஎஸ்இ) தேர்ச்சி பெறுவது கடினமான தேர்வாகும். ஆனாலும், நிர்வாகத் துறையில் சேர வேண்டும் என்ற ஆர்வத்துடன், ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மாணவர்கள் எழுதுகிறார்கள். அந்தவகையில் தற்போது நாம் ருக்மணி ரியார் ஐஏஎஸ் பற்றிய வெற்றி கதையை பார்க்கலாம்.
ருக்மணி ரியார் ஒருமுறை 6 ஆம் வகுப்பில் தோல்வியடைந்தார். இவர் குருதாஸ்பூரில் தனது கல்வியை முடித்த பிறகு, டல்ஹவுசியில் உள்ள புகழ்பெற்ற ஹீரி பள்ளியில் 4 ஆம் வகுப்புக்குச் சேர்ந்தார்.
ஐஏஎஸ் அதிகாரி ருக்மணி ராய்ர் அமிர்தசரஸில் உள்ள குரு நானக் தேவ் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியலில் பட்டம் பெற்றார்.
மும்பையின் டாடா நிறுவனத்தில் சமூக அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், மைசூரில் உள்ள அசோதா மற்றும் மும்பையில் உள்ள அன்னபூர்ணா மகிளா மண்டல் போன்ற அரசு சாரா நிறுவனங்களில் பயிற்சி பெற்றார்.
அந்த அரசு சாரா நிறுவனத்தில் பணிபுரியும் போது, ருக்மணிக்கு குடிமைப் பணியில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டு, யுபிஎஸ்சி தேர்வை எழுத முடிவு செய்தார்.
இதையடுத்து, 2011 ஆம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு ருக்மணி ரியார் அகில இந்திய அளவில் 2வது இடத்தைப் பிடித்தார்.
முக்கியமாக இவர் எந்த பயிற்சியும் இல்லாமல் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றார். இவர் ஜெய்ப்பூர் கிரேட்டர் கமிஷனராக நியமிக்கப்பட்டார். மேலும், ராஜஸ்தானின் ஹனுமன்கர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |