10 முறை தோல்வியடைந்து UPSC தேர்வில் வெற்றி பெற்ற ஐஏஎஸ் அதிகாரி
ஒரு சாதாரண தொடக்கத்தை எப்படி அசாதாரண வெற்றியாக மாற்ற முடியும் என்பதை உணர்த்தும் வகையில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரியின் வெற்றி கதையை பார்க்கலாம்.
யார் அவர்?
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் (CSE) தேர்ச்சி பெறுவது கடினமானது. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மாணவர்கள் நிர்வாகத்தில் சேர வேண்டும் என்ற கனவுகளை சுமந்து வருகிறார்கள்.
இதில், பல ஊக்கமளிக்கும் வெற்றிக் கதைகளில், அவனிஷ் ஷரனின் வெற்றிக் கதையும் இந்தியா முழுவதும் உள்ள UPSC ஆர்வலர்களுக்கு உத்வேகமாக உள்ளது.
இந்திய மாநிலமான பீகாரைச் சேர்ந்தவர் அவனிஷ் ஷரன் (Awanish Sharan). இவர் தனது ஆரம்பக் கல்வியை அரசுப் பள்ளியில் பயின்றார். பின்னர் 10 ஆம் வகுப்பில் 44.7% மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார்.
இதையடுத்து ஓரளவு சிறப்பாக படித்து 12 ஆம் வகுப்பில் 65% மதிப்பெண்கள் பெற்றார். அதேபோல 60 சதவீத பட்டப்படிப்பு விகிதத்தைப் பெற்றார்.
ஆனாலும், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று ஐஏஎஸ் அதிகாரி ஆக விரும்பினார். அதற்காக யுபிஎஸ்சியால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (CDS) மற்றும் மத்திய பொலிஸ் படைகள் (CPF) தேர்வுகளில் கலந்து கொண்டார். ஆனால், அந்தத் தேர்வுகளில் அவரால் வெற்றிபெற முடியவில்லை.
மேலும், மாநில பிசிஎஸ் பிரிலிம்ஸில் (PCS prelims) 10 முறை தோல்வியுற்ற முயற்சிகளை மேற்கொண்டார்.
இதையடுத்து, UPSC CSEயில் தனது முதல் முயற்சியிலேயே நேர்காணல் நிலைக்கு முன்னேறினார். ஆனால், அவர் வெளியேற்றப்பட்டார். பின்பு தனது இரண்டாவது முயற்சியில் 77வது ரேங்க் பெற்றார்.
இதையடுத்து, 2009 -ம் ஆண்டில் ஐஏஎஸ் பணியில் சேர்ந்தார். தற்போது சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |