சிக்ஸர் மழையில் 84 ஓட்டங்கள் விளாசிய ஜட்ரான்! தெறிக்கவிட்ட டேவிட் மில்லர்
Ibrahim Zadran 84 runs vs shajah warriorz: ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இப்ராஹிம் ஜட்ரான் 84 ஓட்டங்கள் விளாசினார்.
கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இப்ராஹிம் ஜட்ரான் 53 பந்துகளில் 84 ஓட்டங்கள் விளாசினார்.
இப்ராஹிம் ஜட்ரான் ருத்ரதாண்டவம்
கல்ஃப் ஜெயண்ட்ஸ் மற்றும் ஷார்ஜா வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்டர்நெஷனல் லீக் டி20 போட்டி ஷார்ஜாவில் நடந்து வருகிறது.
Brother, played just like his idol 7️⃣! 🔥 Zadran Nation, how’s the josh!?!? 🥳😎 [Gulf Giants, Bring It On, Adani, Adani https://t.co/ppCewWGH76
— Gulf Giants 🦅 (@GulfGiants) November 22, 2026
முதலில் களமிறங்கிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணியில் குர்பாஸ் (3), லிவிங்ஸ்டன் (1) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேற இப்ராஹிம் ஜட்ரான் ருத்ரதாண்டவம் ஆடினார். அவருடன் கைகோர்த்த டேவிட் மில்லரும் அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார்.
அரைசதம் விளாசிய இப்ராஹிம் ஜட்ரான் (Ibrahim Zadran) 53 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 84 ஓட்டங்கள் விளாசினார்.
சித்திக், மில்னே மிரட்டல்
டேவிட் மில்லர் (David Miller) 32 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்களில் மில்னே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஏனைய வீரர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால், கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ஓட்டங்கள் எடுத்தது.
ஆடம் மில்னே (Adam Milne), ரிச்சர்ட் க்ளீஸன் மற்றும் ஜுனைத் சித்திக் தலா 2 விக்கெட்டுகளும், வாக்கர் சலாம்கெய்ல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

