டெஸ்ட் கிரிக்கெட்டில் பின்னடைவை சந்தித்த விராட் கோலி, ஜடேஜா - அதிர்ச்சி தகவல்
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேன், 2 ஆம் இடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட், 3வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித், 4 ஆம் இடத்தில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இலங்கை அணிக்கு எதிரான தொடரில் சொதப்பியதால் இந்தத் தரவரிசையில் முதல் 5 இடங்களில் எப்போதுமே இடம் பிடித்திருக்கும் விராட் கோலி 5வது இடத்தில் இருந்து 4 இடங்கள் கீழிறங்கி 9வது இடத்திற்கு சரிந்துள்ளார். 10வது இடத்தில் ரிஷப் பண்ட் இடம் பெற்றுள்ளது. அதேசமயம் 6வது இடத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இடம் பெற்றுள்ளார்.
? Jasprit Bumrah breaks into top 5 ?
— ICC (@ICC) March 16, 2022
? Jason Holder reclaims top spot ?
? Dimuth Karunaratne rises ?
Some big movements in the latest @MRFWorldwide ICC Men's Test Player Rankings ?
Details ? https://t.co/MQENhZlPP8 pic.twitter.com/8OClbDeDtS
இதேபோல் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் முதலிடமும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 2 வது இடமும், தென்ஆப்பிரிக்காவின் காஜிசோ ரபடா 3 வது இடமும் வகிக்கிறார்கள். பகல்-இரவு டெஸ்டில் 8 விக்கெட்டுகளை அள்ளிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 6 இடங்கள் உயர்ந்து 4 வது இடமும் பிடித்துள்ளார்.
ஆல்ரவுண்டர் தரவரிசையில் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 175 ரன்கள் குவித்ததுடன், 9 விக்கெட்டுகளும் வீழ்த்தியதால் முதலிடம் பிடித்த ஜடேஜா, 2வது டெஸ்டில் சரியாக விளையாடததால் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்த பட்டியலில் முதலிடத்தில் வெஸ்ட் இண்டீசின் ஜாசன் ஹோல்டர் இடம் பிடித்துள்ளார்.