உலகக்கோப்பை தொடர் நாயகன் விருதை கோலிக்கு கொடுக்கலாமா? ரசிகர்களிடம் ஐசிசி கேள்வி
இந்திய அணி வீரர் விராட் கோலிக்கு தொடர் நாயகன் விருதை அளிக்கலாமா என ஐசிசி கேள்வி கேட்டுள்ளது.
2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடக்க உள்ளது. இதில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
20 ஆண்டுகளுக்கு பின் இரு அணிகளும் மீண்டும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மோதுவதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நடப்பு தொடரில் இந்திய வீரர் விராட் கோலி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் 3 சதங்கள் மற்றும் 5 அரைசதங்களுடன் 711 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
இதன்மூலம் அவர் ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்த நிலையில் ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில், 'உலகக்கோப்பையில் விராட் கோலி ஒரு வீரரின் அதிகபட்ச ரன்களை பதிவு செய்தார். தொடரின் நாயகன் விருதை அவர் பெற ரசிகராக இருந்து நீங்கள் வாக்களிப்பீர்களா?' என கேள்வி எழுப்பியுள்ளது. அதற்கு ரசிகர்கள் கோலிக்கு ஆதரவாக பதில் அளித்து ட்வீட் செய்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |