துடுப்பாட்டக்காரர்களுக்கு சிக்கல் - ஒரு நாள் கிரிக்கெட் விதிகளில் மாற்றம் செய்யும் பிசிசிஐ
சமீபத்தில் நடைபெற்ற ஐசிசி நிர்வாகிகள் கூட்டத்தில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் செய்ய உள்ள சில மாற்றங்கள் குறித்து பரிசீலித்துள்ளனர்.
2 பந்து விதி
50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில், ஒரு இன்னிங்ஸில் 2 புதிய பந்துகள் பயன்படுத்தபட்டு வந்தது. இதனால், கடைசி ஓவர்களில் கூட பந்துகள் ஸ்விங் ஆகாமல் இருந்தது.
இந்த விதி துடுப்பாட்டக்காரர்களுக்கு சாதகமாக இருப்பதாகவும், இந்த விதியை மாற்ற வேண்டுமென்றும் பிரெட் லீ உள்ளிட்ட பந்துவீச்சாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த வீதியில் சிறிய மாற்றம் ஒன்றை செய்ய ஐஐசி முன்வந்துள்ளது. இனிமேல் 50 ஓவர் போட்டிகளில், 25 ஓவர் வரை 2 புதிய பந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
25 ஓவர்களுக்கு பிறகு, 2 பந்துகளில் ஏதேனும் ஒரு பந்தை மட்டுமே பயன்படுத்த முடியும். எந்த பந்தை பயன்படுத்தலாம் என்பதை பந்து வீசும் அணியே தேர்வு செய்து கொள்ளலாம்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றம்
இதே போல் டெஸ்ட் கிரிக்கெட்டில், ஒரு நாளுக்கு 90 ஓவர்கள் வீச வேண்டும் என்ற விதி உள்ளது.
ஆனால் தற்போது எந்த அணியும் 90 ஓவர்களை வீசாத நிலையில், ஒரு ஓவர் முடிந்து அடுத்த ஓவர் வீசுவதற்கு இடையே 60 வினாடிகள் மட்டுமே இடைவெளி இருக்க வேண்டும் என்ற விதியை கொண்டு வந்துள்ளது.
3 முறைக்கு மேல் இந்த விதியை மீறினால் துடுப்பாட்டம் ஆடும் அணிக்கு கூடுதலாக 5 ஓட்டங்கள் அளிக்கப்படும்.
மேலும், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியை 20 ஓவர் போட்டியாக மாற்ற ஆலோசித்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |