இந்தியா-பாகிஸ்தான் தொடர் நடைபெற வேண்டும் என்றால் இது தான் ஒரே வழி! ICC சிஇஓ சொன்ன தகவல்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே தொடர் நடைபெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை ஐசிசி சிஇஓ கூறியுள்ளார்.
உலககிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் போட்டி தான் இந்தியா-பாகிஸ்தான் போட்டி, ஆனால் இரு நாடுகளுக்கிடையே இருக்கும் அரசியல் பிரச்சனை காரணமாக, ஐசிசி தொடர்களை தவிர, இரு அணிகளுமே நேரடியாக மோதிக் கொள்ளாமல் உள்ளன.
இது குறித்து ஐசிசி சிஇஓ கூறுகையில், இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே தொடர் நடைபெறுவது இல்லை. இரண்டு அணிகளுக்கும் இடையே உள்ள அரசியல் பிரச்சினை காரணமாகவே கடந்த பல ஆண்டுகளாக தொடர் நடைபெறாமல் இருக்கிறது.
இரு அணிகளுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தி இருதரப்பு தொடர் நடைபெற வேண்டுமெனில் இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் கலந்தாலோசித்து போட்டிகள் நடைபெறுவதை சம்மதித்து உறுதிசெய்ய வேண்டும்.
இருநாட்டு கிரிக்கெட் நிர்வாகங்களும் இருதரப்பு தொடரில் மோதிக்கொள்ள சம்மதிக்கும் பட்சத்தில் ஐசிசி அவர்களுக்கான அட்டவணையை தொகுக்கும் என்று கூறியுள்ளார்.