சாம்பியன்ஸ் டிராபி 2025: இங்கிலாந்துக்கு 326 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில், 325 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது.
லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றுவரும் இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்ட தெரிவு செய்தது.
இப்ராஹிம் ஜத்ரானின் அதிரடியான சதத்துடன் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 325 ஓட்டங்கள் குவித்தது.
ஜத்ரான் 146 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 177 ஓட்டங்கள் குவித்தார்.
இதன்மூலம், இந்த தொடரில் அதிக தனிநபர் ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து 325 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கி விளையாடிவருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Ibrahim Zadran, England, Afghanistan