சாம்பியன்ஸ் டிராஃபி 2025 பரிசுத்தொகை விவரம்: முதல் பரிசு எவ்வளவு தெரியுமா?
ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி 2025 பரிசுத்தொகை குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
53 சதவீதம்
பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி 2025 கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.
"ஏ" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், "பி" பிரிவில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் என பிரிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் விளையாடுகிறது.
இந்தத் தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் ஆகும் அணிக்கு 2.24 மில்லியன் டொலர் பரிசாக வழங்கப்படும்.
கடந்த 2017ஆம் ஆண்டு தொடரை விட 53 சதவீதம் பரிசுத்தொகை இம்முறை உயர்த்தப்பட்டுள்ளது.
பரிசுத்தொகை விவரம்
சாம்பியன் அணி - 2.24 மில்லியன் டொலர்கள்
ரன்னர்அப் - 1.12 மில்லியன் டொலர்கள்
அரையிறுதியில் வெளியேறும் அணி - 560,000 டொலர்கள்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |