இந்தியா-வங்கதேசம் பலப்பரீட்சை: பேட்டிங்கை தேர்வு செய்த வங்காளதேச அணி!
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதும் போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர்
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. இந்திய அணி மோதும் அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெறுகிறது.
இந்நிலையில், இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான நாணய சுழற்சியில் வங்கதேச அணி வெற்றி பெற்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் இந்திய அணி முதலில் பந்து வீச உள்ளது.
அணிகள் விவரம்
பங்களாதேஷ்: தன்சித் ஹசன், சௌமியா சர்க்கார், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேட்ச்), தவ்ஹித் ஹ்ரிடோய், முஷ்பிகுர் ரஹீம்(வ), மெஹிதி ஹசன் மிராஸ், ஜேக்கர் அலி, ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப், தஸ்கின் அகமது, முஸ்தபிஜுர் ரஹ்.
Our Playing XI for #BANvIND 👊
— BCCI (@BCCI) February 20, 2025
Updates ▶️ https://t.co/ggnxmdG0VK#TeamIndia |#ChampionsTrophy pic.twitter.com/pKwRfCt2MR
இந்தியா: ரோஹித் சர்மா (கேட்ச்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வ), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, குல்தீப் யாதவ்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |