கடைசி வரை போராடிய அஸ்மத்துல்லா மிர்சா: தென்னாப்பிரிக்காவுக்கு 245 ஓட்டங்கள் இலக்கு
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு 245 ஓட்டங்களை இலக்காக ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா-ஆப்கானிஸ்தான் போட்டி
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ்(25) ஓட்டங்களையும், இப்ராஹிம் சத்ரான் (15) ஓட்டங்களையும் குவித்து ஆட்டத்தை இழந்தனர்.
When you receive that appreciation from your Senior! ?
— Afghanistan Cricket Board (@ACBofficials) November 10, 2023
Truly Gratifying! ? @RashidKhan_19 ? @AzmatOmarzay#AfghanAtalan | #CWC23 | #AFGvSA | #WarzaMaidanGata pic.twitter.com/JfjbROGYjH
இவர்களை தொடர்ந்து ரஹ்மத் ஷா (26), இக்ராம் அலிகில்(12), நூர் அகமது(26) ஓட்டங்களையும் குவித்தனர்.
ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக அஸ்மத்துல்லா மிர்சா 7 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் விளாசி 107 பந்துகளில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்கள் குவித்தார்.
இதனால் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 244 ஓட்டங்கள் குவித்தது.
BEAST MODE ?
— Proteas Men (@ProteasMenCSA) November 10, 2023
A ball of emotions @GeraldCoetzee62 ? #CWC23 #BePartOfIt pic.twitter.com/53ExrW8c3L
தென்னாப்பிரிக்க அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை ஜெரால்ட் கோட்ஸி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |