நெதர்லாந்தை மிரட்டிய வார்னர், மேக்ஸ்வெல்: உலகக்கோப்பையில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த அவுஸ்திரேலியா
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணியை 309 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
அதிரடி காட்டிய வார்னர், மேக்ஸ்வெல்
டெல்லியில் இன்று நடைபெற்ற 13வது உலகக்கோப்பையின் லீக் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முன்னணி வீரரான டேவிட் வார்னர் 93 பந்துகளில் 11 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் விளாசி 104 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
David Warner is inevitable ? Back-to-back centuries for the Australian opener ?@mastercardindia Milestones ?#CWC23 #AUSvNED pic.twitter.com/sr4Sn9xHPi
— ICC (@ICC) October 25, 2023
அவரை தொடர்ந்து களமிறங்கிய ஸ்மித் 71 ஓட்டங்களும், லபுசாக்னே 62 ஓட்டங்களும் விளாசி ஆட்டமிழந்தனர். ஆட்டத்தின் மையத்தில் களமிறங்கிய மேக்ஸ்வெல் சரவெடியாக வெடித்து எதிரணி வீரர்களின் பந்துகளை பந்தாடினார்.
தனது அதிரடியான ஆட்டத்தால் 40 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார், இது உலக கோப்பையில் அடிக்கப்பட்ட அதிவேக சதமாகும்.
மொத்தம் 44 பந்துகளை எதிர்கொண்ட மேக்ஸ்வெல் 8 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 106 ஓட்டங்கள் குவித்தார்.
#CWC2023 #AUSvsNED
— Express Sports (@IExpressSports) October 25, 2023
FASTEST ODI WORLD CUP HUNDRED!
0, 4, 4, 1, 0, 4, 1, 1, 4, 2, 1, 4, 0, 0, 0, 2, 2, 1, 2, 1, 1, 4, 6, 0, 1, 2, 6, 0, 6, 0, 1, 6, 1, 6, 1, 4, 4, 6, 6, 6
The Big Show indeed, Glenn Maxwell?
LIVE UPDATES: https://t.co/yQH8AAtpBg pic.twitter.com/kEGGuvCa2a
இதனால் அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 399 ஓட்டங்களை குவித்தது.
அபார வெற்றி
மிகப்பெரிய இலக்குடன் இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்து இருந்தது.
முன்னணி வீரர்களான விக்ரம்ஜித் சிங்(25), மேக்ஸ் ஓடவுட்(6), கொலின் அக்கர்மேன்(10), பாஸ் டி லீட்(4), சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்(11) என சொற்ப ஓட்டங்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தனர்.
இதனால் மிகப்பெரிய தடுமாற்றத்தை சந்தித்த நெதர்லாந்து அணி 21 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 90 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
A 309-run win for Australia - biggest margin of victory by runs in World Cup history#AUSvNED #CWC23 pic.twitter.com/GcoODIAjUg
— Cricbuzz (@cricbuzz) October 25, 2023
இதன் மூலம் அவுஸ்திரேலிய அணி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 309 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி தனது அபார வெற்றியை அவுஸ்திரேலியா பதிவு செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |