மீண்டும் மண்ணை கவ்விய இலங்கை: 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி
உலக கோப்பை தொடரில் இலங்கை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இலக்கை நிர்ணயித்த இலங்கை
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதிய நிலையில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனால் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இலங்கை அணி களமிறங்கியது, அணியின் முன்னணி ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து திரும்பினர்.
தொடக்க வீரர் குசல் பெரேரா மட்டும் 9 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் 51 ஓட்டங்களை குவித்தார். அவரை தொடர்ந்து சற்று பொறுப்புடன் விளையாடிய மகிஷ் திங்க்ஷனா 91 பந்துகளில் 38 ஓட்டங்கள் குவித்தார்.
இதன்மூலம் இலங்கை அணி 46.4 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 171 ஓட்டங்கள் குவித்துள்ளது.
பந்துவீச்சை பொறுத்தவரை டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும், லாக்கி பெர்குசன், மிட்செல் சான்ட்னர், ரச்சின் ரவீந்திரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Wickets fell quickly in front of him, but Kusal Perera has launched into New Zealand ?#CWC23 #NZvSL pic.twitter.com/uLml9putxY
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 9, 2023
வெற்றி பெற்ற நியூசிலாந்து
அரையிறுதி போட்டிக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அதிக ரன் ரேட் உடன் இந்த போட்டியை வென்றாக வேண்டும் என்ற நிர்பந்தம் நியூசிலாந்து அணிக்கு இருந்தது.
இதனால் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை நியூசிலாந்து வீரர்கள் காண்பிக்க தொடங்கினர்.
தொடக்க ஆட்டக்காரர்களான கான்வே 45 ஓட்டங்களும், ரச்சின் ரவீந்திரன் 42 ஓட்டங்களும் சிறப்பாக குவித்தனர் அவரை தொடர்ந்து டேரில் மிட்செல் 31 பந்துகளில் 43 ஓட்டங்களை குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இறுதியில் 23.2 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 172 ஓட்டங்கள் குவித்தது.
மேலும் உலக கோப்பை தொடரில் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |