இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது சிறப்பானது: நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்
இந்திய மண்ணில் இந்தியாவிற்கு எதிராக விளையாடுவது மிகவும் சிறப்பானது என நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
அரையிறுதி போட்டி
13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விமர்சையாக நடைபெற்று வருகிறது, இதில் லீக் சுற்றுகள் அனைத்து நிறைவடைந்துள்ள நிலையில் அரையிறுதி போட்டிகள் நாளை(நவம்பர் 15ம் திகதி) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.
அரையிறுதிக்கு இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் தகுதி பெற்றுள்ளனர். உலக கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய 9 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
மேலும் 15ம் திகதி நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.
கேன் வில்லியம்சன் பேட்டி
இந்நிலையில் இந்திய அணியுடன் அரையிறுதி போட்டியில் மோதப்போவது குறித்து பேசிய நியூசிலாந்து கேப்டன் இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிராக உலக கோப்பை அரையிறுதியில் விளையாடுவது மிகவும் சிறப்பான ஒன்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுவரை நாங்கள் பெரிய அளவிலான ரசிகர்கள் மத்தியில் விளையாடியது பிற நாடுகளில் தான், எங்கள் மண்ணில் உள்ள மைதானங்கள் மிகவும் சிறியவை மற்றும் மைதானங்களும் பெரிய அளவில் நிரம்பாது.
ஆனால் அரையிறுதி போட்டியில் மும்பை வான்கடே மைதானம் முழுவதும் நீல ஜெர்சிக்களால் நிரம்பி வழியும் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |