வெளுத்து வாங்கிய டி காக்: வங்கதேச அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணியை 149 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.
வெளுத்து வாங்கிய டி காக்
மும்பை வான்கடே மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்து களமிறங்கியுள்ளது.
கடந்த போட்டியில் 85 ஓட்டங்கள் விளாசிய ரீஸ் ஹென்றிக்ஸ் 12 ஓட்டங்களில் இருந்தபோது சொரிஃபுல் இஸ்லாம் ஓவரில் போல்டு ஆனார். இங்கிலாந்துக்கு எதிராக 60 ஓட்டங்கள் விளாசியிருந்த வான் டெர் டுசன் ஒரு ரன்னில் மெஹிதி ஓவரில் LBW முறையில் ஆட்டமிழந்தார்.
ஆனால் மறுமுனையில் நிலைத்து விளையாடிய டி காக் வங்கதேச அணி பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். 140 பந்துகளை எதிர்கொண்ட டி காக் 15 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் என மொத்தம் அதிரடியாக 174 ஓட்டங்கள் குவித்து ஹசன் மஹ்மூத் பந்தில் அவுட்டானார்.
அவரை தொடர்ந்து மார்க்ரம் (60), கிளாசென்(90) ஓட்டங்கள் குவித்து அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றனர். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 382 ஓட்டங்கள் குவித்தது.
Heinrich Klaasen misses out on consecutive World Cup centuries, but it's a brilliant knock nonetheless ?https://t.co/34ueT5Ocw3 #SAvBAN #CWC23 pic.twitter.com/ypCqpLV0iu
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 24, 2023
இமாலய வெற்றி
இதையடுத்து மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியில் முன்னணி வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினர்.
மஹ்முதுல்லாஹ்(Mahmudullah) மட்டும் நீண்ட போராட்டத்தை நடத்தி 111 பந்துகளில் 111 ஓட்டங்கள் குவித்தார்.
The only batter who stood tall today for Bangladesh ?
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 24, 2023
Take a bow, Mahmudullah ? https://t.co/34ueT5Ocw3 #SAvBAN #CWC23 pic.twitter.com/dnxvPkGv3A
இருப்பினும் வங்கதேச அணி 46.4 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 233 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
இதனால் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணியை 149 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
CRICBUZZ
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |