பந்துவீச்சில் மிரட்டிய லஹிரு குமரா: உலக கோப்பையில் இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
156 ஓட்டங்களுக்கு சுருண்டது இங்கிலாந்து
13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற இன்றைய லீக் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பேர்ஸ்டோ 30 ஓட்டங்களிலும், மலான் 28 ஓட்டங்களிலும் வெளியேறினர். இதையடுத்து களமிறங்கிய முன்னணி வீரர்கள் ஜோ ரூட், ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
We're all out in Bangalore, with Sri Lanka needing 1️⃣5️⃣7️⃣ to win. #EnglandCricket | #CWC23 pic.twitter.com/vO0wYYjjvb
— England Cricket (@englandcricket) October 26, 2023
மேலும் மொயின் அலி 15 ஓட்டங்களிலும், வோக்ஸ் 0 ஓட்டங்களிலும், பென் ஸ்டோக்ஸ் 43 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் 33.2 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.
இலங்கை அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை லஹிரு குமரா 3 விக்கெட்டுகளையும், மேத்யூஸ், ரஜிதா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இலங்கை அபார வெற்றி
எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் பாத்தும் நிஸ்ஸங்க அதிரடியாக விளையாடி 83 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் விளாசி 77 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
Nissanka and Samarawickrama bossed the chase for Sri Lanka ?https://t.co/fUUAqjrmGS | #ENGvSL | #CWC23 pic.twitter.com/LIaSYnbJMh
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 26, 2023
மறுமுனையில் சிறப்பாக விளையாடிய சதீர சமரவிக்ரம 54 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்ஸர்கள் விளாசி 65 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
இதனால் இலங்கை அணி 25.4 ஓவர்கள் முடிவிலேயே 160 ஓட்டங்களை கடந்து போட்டியில் வெற்றி பெற்றது.
அத்துடன் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி தனது வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |