தடுமாறிய இலங்கை பேட்ஸ்மேன்கள்: நியூசிலாந்துக்கு 172 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயம்
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு 172 ஓட்டங்களை வெற்றி இலக்காக இலங்கை நிர்ணயம் செய்துள்ளது.
172 ஓட்டங்கள் இலக்கு
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதி வருகின்றனர்.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இலங்கை அணியில், முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
Sri Lanka sets a target of 172 for New Zealand. Let the defending begin! #SLvNZ #CWC23 #LankanLions pic.twitter.com/T0lJz5LV8l
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) November 9, 2023
தொடக்க வீரர் குசல் பெரேரா மட்டும் 9 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் 51 ஓட்டங்களை குவித்தார்.
அவரை தொடர்ந்து சற்று பொறுப்புடன் விளையாடிய மகிஷ் திங்க்ஷனா 91 பந்துகளில் 38 ஓட்டங்கள் குவித்தார்.
இதனால் இலங்கை அணி 46.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ஓட்டங்கள் குவித்துள்ளது.
பந்துவீச்சை பொறுத்தவரை டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும், லாக்கி பெர்குசன், மிட்செல் சான்ட்னர், ரச்சின் ரவீந்திரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து களமிறங்க உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |