பேட்டால் அடிக்க சென்ற வீரர்! மைதானத்தில் நடந்த கலவரம்.. ஐசிசி எடுத்த அதிரடி நடவடிக்கை
மைதானத்தில் மோதிக் கொண்ட வீரர்களுக்கு அபராதம் விதித்த ஐசிசி
ஆப்கான் வீரருக்கு அபராதம் விதித்திருப்பதற்கு ரசிகர்கள் அதிருப்தி
பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி பேட்டால் அடிக்க சென்ற சம்பவத்தில் ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் ரசிகர்கள் சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி எதிரணி வீரர் பரீத் அகமதை பேட்டால் அடிக்க சென்றதைத் தொடர்ந்து, போட்டி முடிந்ததும் இரு அணியின் ரசிகர்களும் மோதிக் கொண்டனர்.
ICC
இந்த நிலையில் இரண்டு வீரர்கள் மீதும் ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. ஆசிப் அலி, பரீத் அகமது இருவருக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவிதம் அபராதமாக செலுத்த வேண்டும் என ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
ஆனால் ஆப்கான் வீரருக்கு அபராதம் விதித்திருப்பது சரியல்ல என ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். முதலில் ஆசிப் அலி தான் சீண்டலில் ஈடுபட்டார் என ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
PC: AP