மைதானத்தில் மோதிக்கொண்ட ஜெய்ஸ்வால், அசிதா பெர்னாண்டோ - அபராதம் விதித்த ஐசிசி
மைதானத்தில் மோதிக்கொண்ட ஜெய்ஸ்வால் மற்றும் அசிதா பெர்னாண்டோவிற்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
ஜெய்ஸ்வால், அசிதா பெர்னாண்டோவிற்கு அபராதம்
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 503 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. தேவ்தத் படிக்கல் மற்றும் துருவ் ஜுரெல் சதம் விளாசியுள்ளனர்.
தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால், இலங்கை வீரர் அசிதா பெர்னாண்டோவின் ஓவரில் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள் விளாசிய பின்னர் அவரது பந்திலே ஆட்டமிழந்தார்.
ஜெய்ஸ்வால் விக்கெட்டை வீழ்த்தியதை அசிதா பெர்னாண்டோ கொண்டாடிய போது, இருவருக்கும் மைதானத்திலே வாக்குவாதம் ஏற்பட்டது.
சக வீரர் ஒருவர் ஜெய்ஸ்வாலை சமாதானப்படுத்த முயற்சித்தார். ஆனால் திரும்பி வந்த ஜெய்ஸ்வால் தனது ஹெல்மெட் தலையால் பெர்னாண்டோவை முட்டுவது போல் தள்ளினார்.
இது குறித்து ஐசிசி விசாரணை நடத்தியதில், இருவரும் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக ஒப்புக்கொண்டதால், ஊதியத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டு, தலா ஒரு தகுதிக்குறைப்புப் புள்ளி வழங்கப்பட்டது.
கடந்த 24 மாத காலத்தில் இரு வீரர்களும் இதற்கு முன் எந்தக் குற்றச்செயல்களிலும் ஈடுபட்டிருக்கவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |