ஐசிசி டெஸ்ட் அணி தரவரிசை வெளியீடு! முதலிடத்தில் அதிரடி மாற்றம்.. ஓரங்கட்டப்பட்ட நியூசிலாந்து!
ஐசிசி நிர்வாகம் சர்வதேச டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதன்மூலம் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஐசிசி டெஸ்ட் அணி தரவரிசை பட்டியல்:
- இந்தியா ( 124 ரேட்டிங் )
- நியூசிலாந்து ( 121 ரேட்டிங்)
- ஆஸ்திரேலியா ( 108 ரேட்டிங்)
- இங்கிலாந்து ( 107 ரேட்டிங்)
- பாகிஸ்தான் ( 92 ரேட்டிங்)
- தென் ஆப்பிரிக்கா ( 88 ரேட்டிங்)
- இலங்கை (83 ரேட்டிங்)
- வெஸ்ட் இண்டீஸ் ( 75 ரேட்டிங்)
- வங்க தேசம் ( 49 ரேட்டிங்)
- ஜிம்பாப்வே ( 31 ரேட்டிங்)
?
— ICC (@ICC) December 6, 2021
India are back to the No.1 spot in the @MRFWorldwide ICC Men’s Test Team Rankings.#INDvNZ pic.twitter.com/TjI5W7eWmq