ICC புதிய விதி.. ஒருநாள், டி20 போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் இதை செய்தால் 5 ஓட்டங்கள் பெனால்டி..!
ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் Stop Clock என்ற புதிய விதியை ஐசிசி அறிவித்துள்ளது.
ஆடவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பந்துவீச்சாளர் அடுத்த ஓவரை வீச 60 வினாடிகளுக்கு மேல் எடுத்துக்கொண்டால் அபராதம் விதிக்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தெரிவித்துள்ளது.
இந்த விதி முதலில் சோதனையாகப் பயன்படுத்தப்படும். இன்று நடைபெற்ற ஐசிசி வாரியாக கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
டிசம்பர் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை ஆண்கள் ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் சோதனை அடிப்படையில் இந்த 'stop clock' விதிமுறை பயன்படுத்தப்படும் என தலைமை நிர்வாகிகள் குழு ஒப்புக்கொண்டதாக ஐசிசி அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த கடிகாரம் ஓவர்களுக்கு இடையில் எடுக்கும் நேரத்தை கண்காணிக்க பயன்படுத்தப்படும்.
இஸ்ரோ வேலையை விட்டுவிட்டு ரூ.5000 கோடி நிறுவனத்தை உருவாக்கிய விஞ்ஞானி., எலான் மஸ்க்கிற்கு போட்டியாக வரவுள்ள இந்தியர்
அறிக்கையின்படி முந்தைய ஓவரை முடித்து 60 வினாடிக்குள் அடுத்த ஓவரை வீச தயாராக இல்லை என்றால், இன்னிங்ஸில் மூன்றாவது முறையாக அவ்வாறு செய்யும்போது, 5 ஓட்டங்கள் பெனால்டி விதிக்கப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
stop clock, new rule introduced by ICC, stop clock rule