ஐசிசி தரவரிசை! இலங்கைக்கு எதிராக அதிரடி சதத்தால் கோலி முன்னேற்றம்... முதலிடத்தில் யார்?
ஒரு நாள் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
கோலி முன்னேற்றம்
துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் முதல் இடத்தில் உள்ளார். இலங்கை அணிக்கு எதிராக அதிரடியாக சதம் அடித்து அசத்திய இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி 2 இடங்கள் முன்னேறி 6-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
அதே போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா 1 இடம் முன்னேறி 8-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். பட்டியலில் இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் ராஷி வன் டிர் துசனும், மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானின் இமாம் உல் ஹக்கும் உள்ளனர்.
icc
பந்துவீச்சாளர்கள் தரவரிசை
ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் டிரெண்ட் பவுல்ட் முதல் இடத்திலும், ஹேஸ்லேவுட், ஸ்டார்க், ரசித் கான், மேட் ஹென்றி 2 முதல் 5 இடங்களில் உள்ளனர்.
ஒருநாள் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஷகிப் அல் ஹசன், முகமது நபி, மெஹதி ஹசன், ரசித் கான், மிட்செல் சாண்ட்னெர் ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர்.
icc