ஒருநாள் கிரிக்கெட் அணிகள் புதிய தரவரிசை பட்டியல்! இலங்கை, இந்திய அணிகள் நிலை இதுதான்
ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இந்தியா முன்னேற்றம்
இந்த தரவரிசையின் படி இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா அணிகள் 113 புள்ளிகளுடன் முதல் 3 இடங்களில் உள்ளன. 4வது இடத்தில் அவுஸ்திரேலியா (112 புள்ளிகள்), 5வது இடத்தில் பாகிஸ்தான் (106 புள்ளிகள்) அணிகள் உள்ளன.
6 முதல் 10 இடங்களில் தென் ஆப்பிரிக்கா (100 புள்ளிகள்), வங்காளதேசம் (95 புள்ளிகள்), இலங்கை (88 புள்ளிகள்), ஆப்கானிஸ்தான் (71 புள்ளிகள்), வெஸ்ட் இண்டீஸ் (71 புள்ளிகள்) ஆகிய அணிகள் உள்ளன.
தரவரிசையில் மாற்றம்
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற பின்னரே தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் இந்த போட்டிக்கு முன்னர் நியூசிலாந்து 115 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இங்கிலாந்து 113 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், இந்தியா 111 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.