WTC தொடரில் 4 நாள் டெஸ்ட் போட்டி; இந்த 3 அணிகளுக்கு மட்டும் விலக்கு - ஐசிசி முக்கிய முடிவு
அடுத்த WTC தொடரில் 4 நாள் டெஸ்ட் போட்டியை அறிமுகப்படுத்த ஐசிசி பரிசீலித்து வருகிறது.
4 நாள் டெஸ்ட் போட்டி
2027-29 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் 4 நாள் டெஸ்ட் போட்டிகளை அறிமுகப்படுத்த ஐசிசி பரிசீலித்து வருகிறது.
சிறிய அணிகள் அதிக டெஸ்ட் போட்டிகள் விளையாடுவது மற்றும் நீண்ட தொடர்களை நடத்துவதை நோக்கமாக கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நேரம் மற்றும் செலவு காரணமாக 5 நாள் டெஸ்ட் போட்டிகளை நடத்த சிறிய அணிகள் தயங்குவதால் ஐசிசி தலைவர் அமித்ஷா இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளையில், இந்தியா அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 3 நாடுகளும் 5 நாட்கள் டெஸ்ட் போட்டிகளை நடத்த அனுமதிக்க உள்ளது.
மேலும், 5 நாள் போட்டியில் ஒரு நாளைக்கு 90 ஓவர்கள் வீசப்படும் நிலையில், 4 நாள் டெஸ்ட்டில் 98 ஓவர்கள் வீசப்படும் என்ற விதி கொண்டுவரப்பட உள்ளது.
2025-27 சுழற்சியில் போட்டியிடும் 9 நாடுகளுக்கு இடையே நடைபெறும் 27 டெஸ்ட் தொடர்களில், 17 தொடர்கள் 2 போட்டிகள் மட்டுமே கொண்ட தொடராக இருக்கும். அதே நேரத்தில் 3 போட்டிகள் கொண்ட 6 தொடர்கள் இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |