அடித்து நொறுக்கிய கோலி! ஐசிசி தரவரிசை பட்டியலில் முன்னேற்றம்.. அவரை முந்திய இலங்கை வீரர்
டி20 கிரிக்கெட்டுக்கான புதிய தரவரிசை பட்டியல்.
விராட் கோலி முன்னேற்றம்.
டி20 போட்டிக்கான துடுப்பாட்ட வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் பாகிஸ்தான் தொடக்க வீரர் ரிஸ்வானும் (849 புள்ளிகள்) 2வது இடத்தில் நியூசிலாந்து தொடக்க வீரர் கான்வேயும் (831) உள்ளனர்.
இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் (828 புள்ளிகள்) 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார். இந்த பட்டியலில் இலங்கை அணியின் பதும் நிஷங்கா (658 புள்ளிகள்) 8வது இடத்தில் உள்ளார்.
AFP
புதிய தரவரிசைப் பட்டியலின்படி 14வது இடத்தில் இருந்து ஐந்து இடங்கள் முன்னேறி 9வது இடத்தைக் விராட் கோலி பிடித்து உள்ளார்.
சமீபத்திய பாகிஸ்தான் உடனான போட்டியில் விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது.