கைகுலுக்க மறுத்த விவகாரம்: அவரை வெளியேற்ற வேண்டும்..பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி
போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்டை நடப்பு தொடரில் இருந்து நீக்க வேண்டும் என்ற பிசிபியின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.
கை குலுக்க மறுத்த விவகாரம்
ஆசியக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
நாணய சுழற்சியின்போது இந்திய அணித்தலைவர் சூர்யகுமாருடன் கைகுலுக்க வேண்டாம் என, போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் பாகிஸ்தான் அணித்தலைவர் சல்மான் அலி அஹாவிடம் அறிவுறுத்தியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) குற்றம்சாட்டியது.
மேலும், விவகாரத்தில் ஆண்டி பைகிராஃப்டை (Andy Pycroft) நடப்பு தொடரில் இருந்து நீக்க வேண்டும் என்று PCB ஐசிசியிடம் கோரிக்கை விடுத்தது.
நிராகரித்த ஐசிசி
இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.
நேற்றிரவு இந்த முடிவு PCBக்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும், இது PCBயின் மேல்முறையீட்டிற்கு ஐசிசியின் அதிகாரப்பூர்வ பதிலை குறிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |